வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று மாலை 6:00 மணிக்கு வினாடிக்கு 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட இருபோக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு இம்மாதம் 3ம் தேதி வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் அன்றைய தினமே 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டு, ஜூலை 12 ல் வினாடிக்கு 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
நேற்று மாலை 6:00 மணிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி- – சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. அணை நீர்மட்டம் 52.72அடியாக இருந்தது( மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 1510 கன அடி.