கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு மீட்பு ஒத்திகை
பருவமழை காலங்களில் அருவி, ஆறுகளில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் எவ்வாறு தப்பிப்பது என செயல் விளக்கம் கும்பக்கரை அருவியில் நடந்தது.
பெரியகுளம் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பாக செயல்விளக்கம் நிலைய அலுவலர்கள் தர்மராஜ், முத்து செல்லப்பாண்டி தலைமையில் மீட்பு பணி வீரர்கள், சுற்றுலா பயணிகளுக்கு செயல்விளக்கம் காண்பித்தனர். முன்னதாக அருவி மேற்பகுதியில் ‘தெர்மாகோல் அட்டை’ பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் குடம், 20 லிட்டர் பிளாஸ்டிக் கேன், சிலிண்டர் ஆகியவற்றை பயன்படுத்தி எவ்வாறு தங்களை தற்காத்து, தப்பித்துக் கொள்ளலாம் என நீரோடையில் இறங்கி விளக்கம் அளித்தனர்.
இதனை தொடர்ந்து தற்காப்பு பாதுகாப்பு பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.