குச்சனுார் கோயில் ஆடித் திருவிழா: உயர்நீதிமன்றம் உத்தரவு
தேனி மாவட்டம் குச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம், சுவாமி புறப்பாடு தவிர மற்ற நிகழ்ச்சிகளுடன்ஆடித் திருவிழாவை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கம்பம் முத்துகுமரன் தாக்கல் செய்த பொதுநல மனு:குச்சனுாரில் சுயம்பு சனீஸ்வரர் சுவாமி கோயில் ஆடிப்பெருந்திருவிழா இன்று (ஜூலை 20) முதல் ஆடி மாத சனிக்கிழமைகளில் நடத்தப்பட வேண்டும்.
கோயில் புனரமைப்பு பணி காரணமாக இம்முறை ஆடித்திருவிழா நடைபெறாது என அறநிலையத்துறை இணைக் கமிஷனர், கோயில் செயல் அலுவலர் அறிவித்தனர். அப்பணியால் திருவிழாவிற்கு எவ்வித இடையூறும் ஏற்படாது. உள்நோக்குடன் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவிற்கு தடை விதித்தது ஒருதலைபட்சமானது; சட்டவிரோதம். பக்தர்களின் நலன் கருதி தடையின்றி ஆடித் திருவிழா நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வு: கொடியேற்றம், சுவாமி புறப்பாடு தவிர மற்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம். இவ்வாறு உத்தரவிட்டார்.