மழையை விட காற்றின் வேகம் அதிகம்; ஏலத்தோட்டத்தில் சாய்ந்த மரங்கள்
மழையை விட காற்றின் வீச்சும், வேகமும் அதிகமாக உள்ளதால் ஏலத் தோட்டங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்து ஏலச் செடிகள் பாதிப்படைந்துள்ளன.
இருக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.
4 மாதங்களாக மழை இல்லாமலும், அதன் பின் சிறிது மழையும், தற்போது கனமழையும் பெய்து வருகிறது. மழையை காட்டிலும், காற்றின் வீச்சும், வேகமும் மிக அதிகம். காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் ஏலத்தோட்டங்களில் பரவலாக நிழல் தரும் மரங்கள் சாய்ந்து விட்டது.
இதனால் ஏலச்செடிகளும் சேதமாகியது.ஏலச்செடிகள் மரத்தின் நிழலில் தான் வளரும். எனவே ஒவ்வொரு தோட்டத்திலும் நூற்றுக்கணக்கான மரங்கள் செடிகளுக்கிடையே இருக்கும்.
கடந்த புதன் கிழமை இரவு முதல் சாரல் மழையும், சூறைக்காற்றும் வீசி, நூற்றுக்கணக்கான மரங்களை சாய்த்து விட்டது.
வண்டன் மேடு, புளியண் மலை , சங்குண்டான், மேப்பாறை, வாழ வீடு, சாஸ்தா நடை’, ஆன விலாசம், நெடுங்கண்டம், ராஜாக் காடு, சதுரங்காபாறை, அய்யர்பாறை முழுவதும் மரங்கள் சாய்ந்துள்ளது.