போக்குவரத்து மாற்றம்; பல பகுதிகளில் வாகன நெரிசல்
தேனியில் முறையாக திட்டமிட்டும் நேற்று முதல் அமல்படுத்தப்பட்ட மாற்றுப்பாதையில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதுரை கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேனி அரண்மனைப்புதுார் விலக்குப் பகுதியில் இருந்து தொழிற்பேட்டை வரை ரயில்வே மேம்பால பணிகள் நடக்கின்றன. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்ப்டடு நேற்று முதல் மாற்றுப்பாதை 28 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
கனரக வாகனங்களால் ஸ்தம்பிப்பு
நேற்று கனரக வாகனங்கள் நகரில் வந்து செல்ல குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்காததால் பழைய பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு, பெரியகுளம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்தது. பெரியகுளம் ரோடு, என்.ஆர்.டி., ரோடு சந்திப்பு, புது பஸ் ஸ்டாண்ட் அன்னஞ்சி ரோடு பைபாஸ் ரோடு சந்திப்பு, புது பஸ் ஸ்டாண்ட் திட்டச்சாலை, அரண்மனைப்புதுார் விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் நெரிசலில் சிக்கித்தவித்தன. போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த டிராபிக் போலீசார் கூடுதலாக பணியில் அமர்த்தி முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.