சேதமடைந்த நுாலகத்திற்குள் வாசகர் செல்ல அச்சம்! மழையால் நுால்கள் வீணாகும் அவலம்
தேனி மாவட்டத்தில் மைய நூலகம் ஒன்று, 75 கிளை நூலகங்கள், 54 ஊர் புற நூலகங்கள், 30 பகுதிநேரம் என 160 நூலகங்கள் உள்ளன.
பெரும்பாலும் சொந்த கட்டடங்களும், கூடலூர், டொம்புச்சேரி ஊர்கள் உட்பட 10 சதவீதம் கிளை நூலகங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி கவியரசு கண்ணதாசன் கிளை நூலகம் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. மாவட்டத்தில் அதிக சந்தாதாரர்கள் உள்ள நூலக வரிசையில் இந்த நூலகம் உள்ளது. இந்த நுலக கட்டடத்தின் பில்லர்கள் சேதமடைந்துள்ளது. மழை காலங்களில் கட்டடம் ஈரத்தன்மை ஏற்படுகிறது. இதனால் அரிய நுால்கள் பாதிக்கும் நிலை உள்ளது. மேல்மங்கலம் கிளை நூலகத்தில் மேற்கூரை சிலாப் சேதமடைந்து கட்டைகள் முட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல் கம்பம் நுாலகத்தில் கான்கீரிட் சுவர் பெயர்ந்து விழுந்து பல ஆண்டுகளாக ஆனதால் மழைநீர் உள்ளே இறங்கி எப்போது விழுமோ என்ற அபாயத்தில் உள்ளது. க.புதுப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்பட 30 நூலக கட்டடம் சேதமடைந்துள்ளது. இதனால் புத்தகங்கள் மழையில் நனைக்கின்றன.லட்சக்கணக்கான வாசகர்களும், ஆயிரக்கணக்கான சந்தாதாரர்கள் பயன்பெறும் வகையில் நுாலகம் செயல்பட்டுவருகிறது. நூலகங்களுக்கு மேஜை, நாற்காலி உள்ளிட்டவற்றை புரவலர்கள் வழங்குகின்றனர். ஆனால் பல இடங்களில் நுாலக கட்டடங்கள் முறையான பராமரிப்பு இன்றி ஆண்டுக்கு ஆண்டு சேதமடைந்து வருகிறது.
தனலட்சுமி, சமூக ஆர்வலர், தாமரைக்குளம்.–
படித்த இளைஞர்கள் போட்டித்தேர்வில் பங்கேற்ற நுாலகம் மிக பயனுள்ளதாக உள்ளது. தினமும் ஏராளமான இளைஞர்கள் நுாலத்தில் படிக்கின்றனர்.
இன்னும் போட்டித்தேற்விகான புத்தகங்கள் அதிகளவில் நுாலகங் களுக்கு வழங்க வேண்டும்.
பல நுாலக கட்டடங்கள் சேதமடை ந்துள்ளன. இதனால் வாசகர்கள் நுாலகத்தில் அமர்ந்து படிக்க அச்சம் ஏற்படுகிறது. உடனடியாக சேதமடைந்த நுாலகங்களை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-