தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டம்
சின்னமனுார் காமாட்சிபுரம் சென்டெக் வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில்,தொழில்முனைவோர், தேனி உழவர் உற்பத்தியாளர்களின் இயக்குனர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தலைவர் பச்சைமால் தலைமை வகித்தார். அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரி – ஆராய்ச்சி நிலைய உணவு – ஊட்டச்சத்துவியல் துறையின் இணைப் பேராசிரியர் ஆரோக்கியமேரி ஆகியோர் பேசினர். முன்னோடி வங்கியின் நிதிசார் ஆலோசகர் ஸ்ரீமுருகன், மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் ரம்யாசிவசெல்வி திட்டங்கள் பற்றிவிளக்கினர். தொழில்முனைவோர்கள் தாங்கள் தயாரித்த உலர் திராட்சை, வெற்றிலை ஜூஸ், காளான் சத்துமாவு, மசாலாப் பொருட்கள், ஊறுகாய், உடனடி இணை ஊட்டச்சத்துக் கலவை, கொய்யா மிட்டாய், மூலிகை சார்ந்த பொருட்களை காட்சிப்படுத்தி, சந்தேகங்களுக்கு விடையளித்தனர். மனையியல் தொழில்நுட்ப வல்லுனர் ரம்யாசிவச்செல்வி நன்றி தெரிவித்தார்.