பயிர்களுக்கு மருந்து தெளிப்பில் கவனமுடன் செயல்பட அறிவுரை
தேனி: வயல் வெளியில் மருந்து தெளிக்கும் விவசாயிகள் கவனமுடன், உரிய பாதுகாப்புடனும் மருந்து தெளிக்க வேண்டும் என வேளாண் இணை இயக்குநர் சாந்தாமணி அறிவுறுத்தி உள்ளார்.அவர் கூறியதாவது: சாகுபடி செய்துள்ள பயிர்களில் உள்ள நோய் தாக்குதல் பற்றி தெரிந்து கொண்டு, அதற்கு பரிந்துரை செய்த மருந்துகளை குறிப்பிட்ட அளவில் தெளிக்க வேண்டும். மருந்து தெளிக்கும் போது கையுறை, காலணி, முக கவசம், சட்டை கட்டாயம் அணிய வேண்டும். மருந்து தெளிக்கும் பகுதியில் முதியவர்கள், குழந்தைகள், கருவுற்ற பெண்களை அனுமதிக்க கூடாது. மருந்து தெளிக்கும் போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
காற்று வீசும் திசையில் செல்ல வேண்டும். காலி மருந்து பாட்டில்களை நீர்நிலைகள், வயலில் வீசக்கூடாது. மருந்து தெளித்தபின் கட்டாயம் குளித்துவிட்டு, உடைகளை மாற்ற வேண்டும். மருந்து, உரங்கள் வைக்கும் அறையில் துாங்க வேண்டாம்என்றார்.