தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி தலைமை தபால் நிலையம் முன் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், சாத்தியம் இல்லாத இலக்குகளை நிர்ணயித்து கோட்டம், உட்கோட்டம் அதிகாரிகள் நடந்து கொள்வதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் கோட்டச் செயலாளர் பழனி தலைமை வகித்தார். அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் கோட்டச் செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு தபால்துறை எழுத்தர்கள் சங்க செயலாளர் செல்லத்துறை உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கோரிககைகள் குறித்து கோஷங்கள எழுப்பினர்.