சோனியா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
பெரியகுளம், டிச. 10: பெரியகுளத்தில் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவினையொட்டி பெரியகுளம் நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கனகசீதாமுரளி தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சிவபாலு, எஸ்சி, எஸ்டி துறை நகர் தலைவர் பிச்சை, துணைத்தலைவர் காமராசர், செயலாளர் அசோகன் மற்றும் நகர நிர்வாகிகள் துணைத்தலைவர் ஜான்பா, செயலாளர் வீராசாமி, செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டி மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.