பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்
முத்துத்தேவன்பட்டியில் உள்ள பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன் பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில், ‘பட்டு வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பட்டு ஆய்வாளர், அமைச்சு பணயிடங்கள், அனைத்து நிலை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு வழங்கிடவேண்டும். விவசாயிகளுக்கு மல்பெரி நடுவு மானியம், புழு வளர்ப்பு மனை மானிய தொகையினை மத்திய திடங்களுக்கு இணையாக மாநில திட்டங்களிலும் உயர்த்தி வழங்க வேண்டும்’ உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது
மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் உடையாளி, மாவட்ட செயலாளர் சென்னமராஜ், பொருளாளர் முகமது ஆசிக், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி, பொருளாளர் ஆறுமுகம், வேளாண்துறை அமைச்சு பணியாளர் சங்க நிர்வாகி முருகன், தோட்டக்கலை கள அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சாமிக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.