கார்கில் வெற்றி தினம் கொண்டாட்டம்
உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் கார்கில் போர் வெற்றியின் வெள்ளி விழாவினை கொண்டாடினர். விழாவில் முன்னாள் ராணுவ நலச்சங்க தலைவர் ஆரோக்கியசாமி வரவேற்புரை ஆற்றினார். ராயப்பன்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சதீஷ் கார்கில் போர் வெற்றி குறித்து சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஆரோக்கியசாமி நன்றி ஆற்றினார். விழாவில் சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.