மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
தேனி தாலுகா சிபிஎம் கட்சி சார்பில் தேனியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் பொன்னுத்துரை தலைமை வகித்தார். காமுத்துரை மற்றும் வீரமணி முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் தாலுகா செயலாளர் தர்மர் மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.