வேலை வாய்ப்பு முகாம் 25 பேர் தேர்வு
மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் ரிலையன்ஸ், ஜியோ, இன்போகாம் லிமிடெட் நிறுவனம் சார்பில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அருண்நேரு தலைமை வகித்தார். இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் ஜெகராமகாலட்சுமி முன்னிலை வகித்தார். ஜியோ நிறுவன மேலாளர் செல்லப்பாண்டி தலைமையில் மூன்று அலுவலர்கள் நேர்காணல் செய்தனர். நேற்று காலை 10:00 மணிமுதல் மதியம் 2:00 மணி வரை முகாம் நடந்தது. 90 பேர் பங்கேற்றனர். இதில் முதற்கட்ட பணிக்காக 25 பேர் நேர்காணல் மூலம் தேர்வாகினர்.