கத்தியை காட்டி காரில் கடத்தி சென்று பணம் பறிப்பு
போடி பங்கஜம் பிரஸ் முதல் தெருவில் வசிப்பவர் கர்ணன் 54. இவருக்கு சொந்தமான மாந்தோப்பு போடி அருகே வடமலை நாச்சியம்மன் கோயில் அருகே உள்ளது. நேற்று முன் தினம் மாந்தோப்புக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி உள்ளார்.
வரும் வழியில் அடையாளம் தெரியாத 4 நபர்கள் காரில் பட்டா கத்தியுடன் வந்து, கர்ணனின் வாயில் துணியால் பொத்திக் காரில் கடத்தி சென்றுள்ளனர். காரில் இருந்த படி உன்னிடம் நிறைய பணம் இருப்பது எங்களுக்கு தெரியும். எனவே உனது மனைவிக்கு போன் செய்து பணம் கொண்டு வரும் படி மிரட்டி உள்ளனர். பணம் இல்லை என கர்ணன் கூறி உள்ளார். இதனால் கர்ணனின் சட்டையில் இருந்த ரூ.4000 த்தை பறித்துக் கொண்டு, போடி விலக்கில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.
கர்ணன் புகாரில் குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.