Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம்: வாட்ஸ் அப் பரவலை நம்ப வேண்டாம் என கலெக்டர் எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு சிறப்பு முகாம் என வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.மேலும் தவறான தகவல்களை பரப்புவோர் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15ல் முதல்வய் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம்தோறும் அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் பலருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது .

இந்த நிலையில் தற்போது புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், ஆயிரம் ரூபாய் பெறுவதற்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேனி மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியதை அடுத்து இது குறித்து மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது .

தேனி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகையை பெறுவதற்காக சிறப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்றால் வாட்ஸ் அப்பில் வந்த தகவல் தவறான தகவல் என்றும் இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை குறித்து பொதுமக்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தவறான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *