போடி அருகே லோடுமேன் தவறி விழுந்து சாவு
போடி, ஜன.1: தேனி மாவட்டம், போடி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டி மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன்(55), சுமைதூக்கும் தொழிலாளி. இவரது மனைவி அமுதா(44). ஈஸ்வரன் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால், மனைவி கோபித்துக்கொண்டு மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு போடி அருகே உள்ள ரெங்கநாதபுரம் பகுதியில், ராணிமங்கம்மாள் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, ஈஸ்வரன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ விஜய் மற்றும் போலீசார் ஈஸ்வரன் உடலை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.