தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போலீஸ் மாவட்ட சமூக நீதிப்பிரிவு சார்பில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பெரியகுளம் ரோடு ரயில்வே கேட் அருகில் துவங்கியது. கலெக்டர் ஷஜீவனா ஊர்வலத்தை துவக்கி வைத்தார். எஸ்.பி., சிவபிரசாத், கம்மவார் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஊர்வலத்தில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
ஊர்வலம் தேனி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் மஹாலில் நிறைவடைந்தது. தொடர்ந்து நடந்த கருத்தரங்கிற்கு எஸ்.பி., தலைமை வகித்தார். டி.எஸ்.பி.,க்கள் சக்திவேல், பார்த்திபன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.