Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

நுாதன முறையில் பன்றிகளை விரட்டும் விவசாயிகள்

தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா பகுதிகளில் காட்டுப்பன்றிகளை விரட்ட விவசாயிகள் தலை முடிகளை துாவியும், ஒலி எழுப்பும் தகர டப்பாக்களை கட்டி நுாதன முறையில் விரட்டுகின்றனர்.

இத்தாலுகாவில் பெரியகுளம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, எண்டப்புளி, எ.புதுப்பட்டி, முருகமலை, ஈச்சமலை, லட்சுமிபுரம், சொருகுமலை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்குள்ள விளைநிலங்களில் வாழை, தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி ஆகின்றன. சமீபகாலமாக மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இரவு நேரங்களில் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் சிரமத்தை சந்திப்பதுடன், பொருளாதார இழப்பை சந்திப்பது தொடர்கிறது.

தென்னை, வாழைக் கன்றினை வேருடன் பிடுங்கி வேரில் உள்ள கிழங்குகள், தென்னைகளை தின்றுவிடுவதால் முளைப்புத் திறனின்றி வீணாகிறது.

விவசாயி மொக்கபாண்டியன் கூறுகையில், ‘சலுான் கடைகளில் தலை முடிகளை பன்றிகள் நடமாடும் பகுதியில் துாவுகிறோம்.

இதனால் காட்டுப்பன்றிகள் கிழங்கு, தென்னக்குருத்து சாப்பிட மூக்கினால் நுகரும் போது, முடிகள் மூக்கினுள் செல்லும் இதனால் அந்தப்பகுதியில் இருந்து ஓடிவிடும்.

மேலும் காற்றினால் அசையும் தகர டப்பாக்கள் ஒலிக்கும் அதிர்வு நிறைந்த ஒலி அலைகளால் காட்டுப் பன்றிகள் அச்சப்பட்டு ஓடி விடும். நீண்ட போராட்டத்திற்கு பின் இந்த நுாதன முறையில் பன்றிகளை விரட்டிகிறோம்.’,என்றார்.-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *