Wednesday, April 16, 2025
தமிழக செய்திகள்

கருணாநிதிக்கு நாணயம் வெளியிடுவதில் மகிழ்ச்சி; முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் வெளியிடும் நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

கருணாநிதி நாணயம்


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6.50க்கு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.
கருணாநிதியின் நாணயத்தை வெளியிடும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.

பிரதமர் கடிதம்


இந்த நிலையில், கருணாநிதியின் நாணயத்தை வெளியிடும் நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். கடந்த 16ம் தேதி எழுதப்பட்ட கடிதத்தை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

புகழாரம்


பிரதமர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். பலமுறை மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட அவர், அரசியல், இலக்கியம், சமூகப் பணிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு அதிகமாக குரல் கொடுத்துள்ளார். 2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை உதவும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *