பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.24.5 லட்சம் ஒதுக்கீடு
மாவட்டத்தில் பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.24.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
லாபகரமான பருத்தி சாகுபடி திட்டம் தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. இதன்படி பருத்தி அடர்நடவு செய்ய, பயிர் சூழல் ஆய்வு, ஒருங்கிணைந்த உர மேலாண்மை, டிரோன் மூலம் மருந்து தெளிக்க மானியம் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் இத்திட்டத்தில் 1020 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.24.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான்கு வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைய அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம் என, வேளாண் துறையினர் தெரிவித்து உள்ளன.