ஆடு திருட்டு
தேனி; ஆண்டிபட்டி தாலுகா உப்புத்துறை ராம்கண்ணன் மனைவி லதா 38.
இவரது வீட்டில் அருகில் 4 ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த பிப்.12ல் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள 20 கிலோ எடையுள்ள ஆட்டை வீட்டின் அருகில் உள்ள மரத்தில் கட்டிவைத்தார்.
பின் வீட்டிற்குள் சென்று துாங்கிவிட்டு திரும்பி வந்தபோது, ஆடு திருடு போயிருந்தது.
லதா புகாரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.