மூணாறில் சுட்டெரித்தது வெயில்
கேரளாவில் நேற்று இடுக்கி உள்பட மூன்று மாவட்டங்களுக்கு கன மழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ முன் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் விடுத்தது. ஆனால் மழை இன்றி வெயில் காணப்பட்ட நிலையில் நேற்று மதியம் 1:00 மணிக்கு பலத்த மழைக்கான’ எல்லோ அலர்ட்’ விடுக்கப்பட்டது.
இடுக்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகலில் மழை குறைவாக இருந்த நிலையில் இரவில் பலத்த மழை பெய்தது.
பீர்மேடு தாலுகாவில் பலத்த மழையால் கொக்கையாறு பகுதியில் மண், நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் வசித்த 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதுகாப்பு கருதி தற்காலிக முகாமில் வருவாய்துறையினர் தங்க வைத்துள்ளனர்.
மூணாறில் நேற்று காலை முதல் மாலை 4:00 மணி வரை வெயில் கோடையை மிஞ்சும் அளவு சுட்டெரித்தது. மாலை 4:00 மணிக்கு பிறகு மழை மேகம் சூழ்ந்தது.