தேசிய குடற்புழு நீக்க முகாம் மாத்திரைகள் வினியோகம்
காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தேசிய குடற்புழு நீக்க விழிப்புணர்வு முகாம் மற்றும் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கி குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கப்பட்டது.
ஒன்று முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் மத்தியில் டாக்டர்கள் பேசுகையில், ‘குடற்புழு இல்லா இந்தியா உருவாக வேண்டும் என்பதே இம் முகாமின் நோக்கம். பள்ளி குழந்தைகளுக்கு மந்தம், அடிக்கடி வயிற்றுவலி, உடற்சோர்வு, ரத்தசோகை, சிறுநீர் தொற்று, ஊட்டச்சத்து இன்மை குடற்புழுவால் ஏற்படுகிறது. எனவே, திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கவும், கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும், ஈ மொய்த்த பண்டங்களை உண்ணாக்கூடாது என விளக்கினார்கள். மாணவ மாணவிகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டது. உத்தமபாளையம் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கோபாலிருஷ்ணன், ஒடைப்பட்டி மருத்துவ அலுவலர் மணிகண்டன் தலைமையிலும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.