பச்சைக்கு விலை கிடைக்காததால் செவ்வாழைக்கு மாறும் விவசாயிகள்
பல்வேறு காரணங்களால் பச்சை வாழை சாகுபடியை தவிர்த்து செவ்வாழை சாகுபடிக்கு விவசாயிகள் மாற துவங்கியுள்ளனர்.
தேனி தோட்டக்கலை மாவட்டமாகும். இங்கு காய்கறி பயிர்கள், மலர்கள், தென்னை, வாழை, திராட்சை உள்ளிட்ட பழ வகை பயிர்களும் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. நல்ல மகசூல், உரிய விலை கிடைப்பதால் மாவட்டத்தில் பரவலாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு செவ்வாழை, நாழிப் பூவன், நேந்திரன், ஜி 9 எனப்படும் பச்சை வாழை உள்ளிட்ட பல ரகங்கள் 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியாகிறது.
கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் வட்டாரங்களில் அதிகளவில் சாகுபடி யாகிறது.
ஆனால் வாழையில் தீர்க்க முடியாத பிரச்னைகளும் உள்ளன. காற்று வீசும் மாதங்களில் வாழை ஒடிந்து சேதமடையும். வெடி வாழை என அச்சுறுத்தல்உள்ளன. வெடி வாழை பச்சை வாழையில் மட்டுமே வருகிறது. பிற ரகங்களில் வருவது இல்லை.
தற்போது செவ்வாழைக்கு நல்ல விலை கிடைக்கும்.
செவ்வாழை கிலோ ரூ .80 வரை கிடைக்கிறது. ஆனால் பச்சை வாழைக்கு கிலோ ரூ. 25 கிடைக்கிறது. மேலும் பச்சை வாழை ஏற்றுமதியும் முழுமையாக இல்லை.
எனவே படிப்படியாக பச்சை வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை, நோய்தாக்குதல் போன்ற அம்சங்களை கருதி, செவ்வாழை சாகுபடிக்கு தாவியுள்ளனர். இதனால் பச்சை வாழை சாகுபடி பரப்பு குறையத் துவங்கிஉள்ளது.