ஓணம் பண்டிகை இலவச உணவு பொருட்கள் தொகுப்பில் முந்திரி
கேரளாவில் ஓணப்பண்டிகையின் போது வழங்கப்படும் இலவச உணவு பொருட்கள் தொகுப்பில் முந்திரி பருப்பு இடம் பெற்றுள்ளது.
கேரளாவில் ஓணப் பண்டிகையின்போது அனைவருக்கும் இலவச உணவு பொருட்களின் தொகுப்பு அரசு வழங்கியது.
இந்தாண்டு செப்.15ல் ஓணம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தாண்டு மஞ்சள் நிற ரேஷன் கார்டு பயனாளிகள், ஆதரவற்றோர் மையங்களில் வசிப்பவர்களில் நான்கு பேருக்கு ஒன்று என்ற வீதம், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் என உணவு பொருட்கள் தொகுப்பு வழக்கப்படுகிறது.
அதன்படி ரேஷன் கார்டு உள்ள 5.99 லட்சம் பயனாளிகள் பயன் பெற உள்ளனர். அதற்கு அரசு வழங்கல் துறை நிறுவனமான ‘சப்ளை கோ’ வுக்கு அரசு ரூ.34.29 கோடி நிதி வழங்கியது.
கடந்தாண்டு ரூ.447 மதிப்பில் பருப்பு, தேயிலை, வத்தல் பொடி, மஞ்சள்பொடி, நெய் உள்பட பையுடன் 13 வகை பொருட்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்தாண்டு உணவு தொகுப்பில் 50 கிராம் முந்திரி பருப்பும் இடம் பெற்றுள்ளதால் பொருட்களின் எண்ணிக்கை பையுடன் 14 ஆக அதிகரித்தது.
அதன் விலை மதிப்பு ஜி.எஸ்.டி. உள்பட ரூ.555.50. ஆகும். தொகுப்பில் தேயிலை – 100 கிராம், சிறு பருப்பு – 250 கிராம், சேமியா பாயாசம் மிக்ஸ் – 250 கிராம், நெய் 50 மி.லி., முந்திரி பருப்பு – 50 கிராம், தேங்காய் எண்ணெய் – 500 மி.லி., சாம்பார் பொடி, வத்தல் பொடி,மஞ்சள்பொடி, மல்லிபொடி ஆகியவை தலா 100 கிராம்.
பாசிபயறு – 500 கிராம், துவரம்பருப்பு – 250 கிராம், உப்பு ஒரு கிலோ,துணிப்பை ஒன்று ரூ. 16.00.