கொழுக்குமலையில் குழந்தைகள் பயிற்சி மையம்
மாவட்டத்தில் வெளிமாநில புலம் பெயர் தொழிலாளர்கள் பணிபுரியும் பகுதிகளில், அவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக பல்வேறு இடங்களில் பள்ளி கல்வித்துறை பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தோட்டங்கள், கோழிப்பண்ணைகள் உள்ளிட்ட பிற நிறுவனங்களில் வெளிமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் படிக்கின்றனர்.
இவர்கள் குழந்தைகள் அவர்களது தாய்மொழியுடன், தமிழும் கற்றுக்கொள்ள பள்ளிக்கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கொழுக்குமலை தேயிலை தோட்டம், தாடிச்சேடியில் வெளிமாநில குழந்தைகளுக்கான பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இங்கு தன்னார்வலர்கள் மூலம் 31 குழந்தைகளுக்கு பயிற்சி வகுப்புகள் துவங்கி உள்ளது.
கரட்டுப்பட்டியில் பழங்குடியினர் குழந்தைகள் பயிற்சி மையம் துவங்கப்பட்டு, 32 குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி வழங்கப்பட்டு வருகிறது.