Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

பெரியாறு அணை உரிமையை பறிக்க கேரளா முயற்சி: தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை காரணம் காட்டி அணையின் உரிமையை கேரளா சார்பில் பறிக்க முயற்சி நடப்பதாக தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இடுக்கி எம்.பி., டீன் குரியகோஸ் தேசிய அணை பாதுகாப்பு ஆணைய தலைவர் அணில் ஜெயனை நேரில் சந்தித்து, ‘முல்லைப் பெரியாறு அணை பலம் இழந்து விட்டதாகவும் மீண்டும் ஒரு பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் எனவும், இதில் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த தேசிய அணை பாதுகாப்பு ஆணைய தலைவர் அணில் ஜெயின், ‘தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் வரும் அக்டோபரில் முழுமையாக செயல்படும் எனவும், அணை பாதுகாப்பு ஆணையத்தில் அனைத்து உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு பணிகள் விரைவில் நடைபெறும்’ என, தெரிவித்துள்ளார்.

இதற்கு கருத்து தெரிவித்த இடுக்கி எம்.பி., ‘2021ல் மத்திய அரசு நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்புச் சட்டத்தின் 9வது பிரிவின்படி அணை பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஆணையம் நேரடியாக கையாள முடியும். மேலும் 2022 ஏப்.8ல் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கண்காணிப்பு குழு என்னென்ன ஆய்வு பணிகள் செய்கிறதோ அது தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் அதிகார வரம்பில் வரும்.

உரிமையை பறிக்க முயற்சி

அன்வர் பாலசிங்கம், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்: இடுக்கி எம்.பி., கருத்து தெரிவித்திருப்பது தமிழகத்தின் உரிமையை பறிக்க முயற்சி செய்யும் செயலாகும். எக்காரணத்தைக் கொண்டும் பெரியாறு அணை மீதான தமிழகத்தின் உரிமைகளை இனி மேலும் விட்டுக் கொடுக்க முடியாது. பெரியாறு அணை மீது தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் தன் ஆதிக்கத்தை செலுத்தும் பட்சத்தில், களத்தில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.

அணை பாதுகாப்பு ஆணையத்தில் உறுப்பினர்கள் யார் யார் என்று கூட தமிழக விவசாயிகளுக்கு தெரியாத நிலையில், அக்டோபர் முதல் ஆணையம் முழுமையாக முல்லைப் பெரியாறு அணையை கையில் எடுத்துக் கொள்ளும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் விதமாக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்பட துவங்குமானால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அனைத்து விவசாயிகளின் வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *