முதல்வர் கோப்பை போட்டி வேலி காத்த மாணவர்கள்
தேனியில் நடந்த முதல்வர் கோப்பை போட்டிக்கு வந்த மாணவர்கள், ஹாக்கி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வேலி சாய்ந்து விடாமல் இருக்க, அதை தாங்கி பிடித்தனர்.
எனினும், காற்றின் வேகத்தில் வேலி மீண்டும் சாய்ந்தது. தேனியில் மாவட்ட விளையாட்டு அரங்கில், 31.30 லட்சம் செலவில் புதிய ஹாக்கி மைதானம் தயார் செய்யப்பட்டது.
நான்கு மாதங்களுக்கு முன் அதன் தெற்கு பகுதியில் அமைந்திருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
ஜூலையில் அந்த சுவர் கட்டப்படாமல் மைதானம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இந்நிலையில் தடுப்புச் சுவர் இல்லாத ஹாக்கி மைதானத்தில், பந்து ரோட்டிற்கு செல்லாமல் இருக்க தற்காலிக வேலி அமைத்து ஹாக்கி போட்டி துவங்கியது.
காற்றின் வேகம் அதிகரித்ததால் வேலி சாய துவங்கியது. வேலி சாயாமல் இருக்க, போட்டியில் பங்கேற்க வந்த மாணவர்கள் அதை தாங்கி பிடித்தபடி இருந்தனர்.
மாணவர்கள் நின்ற பகுதி பள்ளமாக இருந்ததால் மாணவர்கள் சிரமப்பட்டு பிடித்திருந்தனர். பின் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றனர். இதனால் வேலி சாய்ந்தது.