30கி.மீ தூரத்தை 10மணிநேரத்தில் நீந்தி கடந்த தேனியை சேர்ந்த 10வயது சிறுவன்
இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையுள்ள 30கி.மீ தூரத்தை 10மணிநேரத்தில் நீந்தி கடந்த தேனியை சேர்ந்த 10வயது சிறுவன் உலகசாதனை முயற்ச்சி
.
தேனி மாவட்டம் தேனி நகரை சேர்ந்த ரவிக்குமார் தாரணி தம்பதியர் இவர்களின் மகன் 10வயது சிறுவன் ஜெய்ஜஸ்வந்தன் இச்சிறுவன் தனது தனித்திறன்களில் நீச்சல் பயிற்ச்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் சிறுவனின் பயிற்ச்சியாளார் விஜயகுமார் அதிகபடியான பயிற்ச்சில் தற்போது உலகசாதனை செய்யும் முயற்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர்
இதன் முதல் படியாக நேற்று இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையுள்ள 30கி.மீ தூரத்தை 10மணிநேரத்தில் நீந்தி கடந்த சாதனை செய்து உள்ளான் இதில் குற்றாலஈஸ்வரன் கடந்த தூரம் 30 கிலோமீட்டர் தூரத்தை 16மணிநேரத்தில் நீந்தி சென்ற தூரத்தை இச்சிறுவன் 10மணிநேரத்தில் கடந்து உலகசாதனைக்கு முயற்ச்சி செய்து உலகசாதனை பக்கத்தில் இடம் பிடித்துள்ளான்
இச்சிறுவனை வரவேற்க்கம் நிகழ்ச்சியாக தேனி மாவட்ட மக்கள் தேனி நேரு சிலை அருகே உற்சாக வரவேற்ப்பு செய்தனர் மேலும் சிறுவன் கூறுகையில் தனது 15வயதில் இலங்கை முதல் தனுஷ்கோடி சென்று மீண்டும் வர முடிவு செய்து உள்ளதாக தெரிவித்தார்.