விவசாயிகளுக்கு ஆலோசனை
போடி வட்டாரத்தில் ‘அட்மா’ திட்டத்தில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் தலைமையில் நடந்தது.
விவசாய அலுவலர் அம்பிகா, தோட்டக்கலை துணை அலுவலர் அஜ்மல் கான், வட்டார தொழில் நுட்ப மேலாளர் செல்லப்பாண்டி, விதை சான்றளிப்புத் துறை உதவி இயக்குனர் திலகர், வேளாண் வணிகம் உதவி வேளாண் அலுவலர் மருதமுத்து, மீன் வளத்துறை அலுவலர் கணேஷ், விவேக் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாய வளர்ச்சி நுண்ணுயிர் பாசன திட்டம், அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள், விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள், மீன் வளர்ப்பு மானியம் குறித்து பேசினர். கலசலிங்கம் தோட்டக் கலைத்துறை கல்லூரி மாணவிகள் நிலப் போர்வை திட்டம் பற்றி விளக்கி கூறினர். ஏற்பாடுகளை ஆத்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அலெக்சாண்டர் ராஜ்குமார் செய்திருந்தனர்.