Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

விதையில்லா திராட்சை மகசூல் குறைவு விலையை எதிர்பார்க்கும் விவசாயிகள் கம்பம் பள்ளத்தாக்கில் அறுவடை துவங்குகிறது

விதையில்லா திராட்சை அறுவடை துவங்க உள்ள நிலையில் விளைச்சல் குறைந்துள்ளதால் நல்ல விலை கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆண்டு முழுவதும் திராட்சை விளையும் பகுதியாகும்.

இங்கு ஆண்டிற்கு 3 அறுவடை நடைபெறுகிறது. இந்தியாவில் திராட்சை சாகுபடியில் மஹாராஷ்டிரா நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாகுபடியில் முதலிடம் பெறுகின்றனர்.

ஆனால் ஆண்டிற்கு ஒரு அறுவடை மட்டுமே செய்கின்றனர். மஹாராஷ்டிராவில் விதையில்லா திராட்சை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.

கம்பம் பள்ளத்தாக்கில் பன்னீர் திராட்சை 80 சதவீதம் பகுதியில் சாகுபடியாகிறது. குறிப்பாக சுருளிப்பட்டி காமயகவுண்டப்பட்டி நாராயணத்தேவன்பட்டி குள்ளப்பகவுண்டன்பட்டி கருநாக்கமுத்தன்பட்டி சுருளி அருவி போன்ற பகுதிகளில் பன்னீர் திராட்சையே பிரதானம். ஒடைப்பட்டி பகுதியில் விதையில்லா திராட்சை கணிசமான பரப்பில் சாகுபடியாகிறது.

பன்னீர் திராட்சையும் சாகுபடியாகிறது.

விதையில்லா திராட்சையை மஹாராஷ்டிராவில் டிசம்பரில் அறுவடை துவங்கி மார்ச் வரை பழம் வரத்து இருக்கும்.

கம்பம் பள்ளத்தாக்கில் விதையில்லா திராட்சை அறுவடை செப்டம்பரில் துவங்க உள்ளது. ஆனால் மகசூல் தற்போது திருப்தியான நிலை இல்லை என்கின்றனர் விவசாயிகள்.

ஒடைப்பட்டி முன்னோடி திராட்சை விவசாயி கலாநிதி கூறுகையில், விதையில்லா திராட்சையில் சரத் மற்றும் மாணிக் சந்த் கருப்பு மற்றும் பச்சை சாகுபடி செய்துள்ளேன்.

பொதுவாக ஏக்கருக்கு 10 முதல் 15 டன் மகசூல் கிடைக்கும். ஆனால் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தற்போது மகசூல் குறையும் நிலை உள்ளது .

பன்னீர் திராட்சையும் அறுவடைக்கு தயாராக உள்ளது.

விதையில்லா திராட்சை கிலோ ரூ.80 முதல் 110 வரை விலை கிடைக்க வாய்ப்புள்ளது. மகசூல் குறைவாக இருப்பதால், கட்டுபடியான விலை கிடைத்தால் தான் விவசாயிகள் தப்பிக்க முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *