Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

தர்ணாவில் ஈடுபட ஓய்வூதியர் முடிவு

மாநில அளவில் நவ.16ல் தர்ணாவில் ஈடுபட சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

தேனியில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில அளவிலான கூட்டம் நடந்தது. மாநில தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் மாயமலை, பொருளாளர் ஆனந்தவல்லி, துணைத் தலைவர் அன்பழகன், அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களக்கு வழங்கப்படும் சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியத்தை மாற்றி முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, தேர்தல் அறிக்கையில் கூறி அதனை நிறைவேற்றாத அரசை கண்டித்து நிர்வாகிகள் பேசினர்.

தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவ.16ல் மாவட்ட அளவில் தர்ணா போராட்டம் நடத்துவது, கையெழுத்து இயக்கம் நடத்தி, அதில் பெற்ற மனுக்களை முதல்வருக்கு டிச.,15ல் அனுப்புவது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வரவேற்பு குழுத்தலைவர் சென்னமராஜ், சங்க மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *