சபரிமலை சன்னிதான மரத்தில் தீ
சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தின் முன்புறமுள்ள ஆழியில், பக்தர்கள் கொண்டு வரும் நெய் தேங்காயின் ஒரு மூடியை சமர்ப்பிக்கின்றனர். கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் எரிய துவங்குகின்ற இந்த ஆழி தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். லட்சக்கணக்கான தேங்காய் மூடிகள் இதில் போடப்படுகிறது.
நேற்று மதியம், 12:00 மணியளவில் இந்த ஆழிக்கு பக்கத்தில் உள்ள அரச மரத்தின் மேற்பகுதியில் தீப்பிடித்தது. தொடர்ந்து, பெரிய நடை பந்தலில் இருந்து பக்தர்கள் 18 படிகளில் ஏறி வருவது தடை செய்யப்பட்டது.
தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். இரண்டு நாட்களுக்கு முன், சன்னிதானம் முன்புறம் அமைந்துள்ள தேங்காய் உலர் மையத்திலும் தீப்பிடித்து உடனடியாக அணைக்கப்பட்டது