புதிய பாரத எழுத்தறிவு திட்ட பயிற்சி: பள்ளிகளில் தீவிரம்
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு கல்வியறிவு புகட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. க.புதுப் பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் விரிவுரையாளர் நாகஜோதி புதிய பாரத திட்டம் பற்றி விளக்கினார். இந்த திட்டத்தின் மூலம் மீண்டும் கல்வி பெற வாய்ப்புள்ளதாகவும், பள்ளிப் படிப்பை தொடராதவர்கள் இதில் பங்கேற்று பயன் பெற கேட்டுக் கொண்டார். ஆசிரியைகள் நிறைமதி, ஜெகதீஸ்வரி, தன்னார்வலர் தீபிகா ஆகியோர் பயிற்சியளித்தனர்.
இங்குள்ள கே. எல். எஸ். எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியிலும் இந்த இந்த பயிற்சி நடைபெற்றது. இப்பள்ளியின் தலைமையாசிரியை ராஜலட்சுமி தலைமை வகித்தார். பெயர்களை எழுதுவது, எண்களை எழுதி காட்டுவது போன்ற பயிற்சிகள் நடைபெற்றது. ஆசிரியை மஞ்சுளா, தன்னார்வலர் சரண்யா தேவி ஆகியோர் பயிற்சியளித்தனர்.