புகையிலை விற்ற கடைகளுக்கு ‘சீல் ‘ : ரூ.50 ஆயிரம் அபராதம்
தேனி புதுபஸ் ஸ்டாண்ட் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரு கடைகளுக்கு உணவுப்பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.
மாவட்டத்தில் புகையிலை விற்பனை கண்காணிக்கவும், விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து சிவாஜிநகர் செல்லும் வழியில் உள்ள செல்லதுரை, ஜெயந்தி ஆகியோரது கடை, வாஞ்சிநாதன், காத்தம்மாள் கடைகளில் புகையிலை விற்பதை போலீசார் கண்டறிந்து வழக்கு பதிந்து ‘சீல்’ வைக்க உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவனுக்கு பரிந்துரைத்தனர்.
நேற்று உணவுப்பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன், இரு கடைகளுக்கு சீல் வைத்து தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார். எஸ்.ஐ. இளங்குமரன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.