இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டடம்
தேனி அல்லிநகரம் நகராட்சி ஆரம்பப் பள்ளி கட்டடத்தின் கான்கிரீட் சிலாப் இடிந்து விழும் நிலையில்உள்ளது.
இந்நகராட்சியின் சோலை மலை அய்யனார் கோயில் தெருவில் நகராட்சி ஆரம்ப பள்ளி செயல்படுகிறது.இங்கு 5ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளி வளாகத்தில் வட்டாரக்கல்வி அலுவலகமும் செயல்படுகிறது. மாணவர்கள் வகுப்பறை, உணவு உண்ணும் பகுதியில் உள்ள கட்டடத்தின் கான்கிரீட் சிலாப் கட்டடம் பெயர்ந்து விழ, துவங்கி உள்ளது. பல இடங்களில் கம்பிகள் தெரிகின்றன.ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கல்வித் துறையினர்,பொதுப்பணித் துறையினர் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.