அன்னதான முகாம் ஐயப்ப பக்தர்களுக்கு
கூடலுார்: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு லோயர்கேம்ப் பகவதி அம்மன் கோயிலில் அன்னதானம் துவக்கப்பட்டது.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், செல்வராஜ் அன்னதான கமிட்டி இணைந்து 9ம் ஆண்டு அன்னதான முகாம் நேற்று பகவதி அம்மன் கோயிலில் துவங்கியது. ஜன.15 வரை தொடர்ந்து 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறும். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் 24 மணி நேரமும் தங்குவதற்கு வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர், காலுறை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படும் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.