Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிர் கொள்ள குழுக்கள் அமைப்பு

மாவட்டத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட கூடிய பகுதிகள் என 42 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்காக வடகிழக்கு பருமழையை எதிர் கொள்ள தாலுகா வாரியாக குழுக்கள் அமைத்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள், மீட்பு,நிவாரணப்பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தாலுகா வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதவி கலெக்டர் நிலையில் ஒரு குழுவும், தாசில்தார் நிலையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டிபட்டி– மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, தேனி -மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், பெரியகுளம் -சப்கலெக்டர் ரஜோத் பீடான், உத்தமபாளையம் -ஆர்.டி.ஓ., தாட்சாயினி, போடி -மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுவில் வருவாய், வேளாண், கால்நடை பராமரிப்பு, பொது சுகாதாரம், தோட்டக்கலை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி, போலீஸ், தீயணைப்புத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடிய பகுதிகளாக போடியில் 9, உத்தமபாளையத்தில் 9, பெரியகுளத்தில் 7, தேனியில் 5, ஆண்டிபட்டியில் 12 என 42 இடங்கள் கண்டறிப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *