தொழில் முனைவு மையம் திறப்பு
சின்னமனூர்: தமிழக அரசு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் ஆதிதிராவிடர,பழங்குடியினருக்கான திட்டத்தின் கீழ் தொழில் முனைவு மையத் திறப்பு விழா காமாட்சிபுரம் அறிவியல் மையத்தில் நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் வரவேற்றார். தமிழக அறிவியல் மன்றத்தின் மாநில உறுப்பினர் லின்சென்ட் மையத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அறிவியல் மைய இயக்குநர் பச்சமால், தாட்கோ மேலாளர் சரளா, மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் மோகன்ராஜ் கலந்து கொண்டனர். துணை இயக்குநர் சிவராம், பெண் தொழில் முனைவோருக்கான திட்டங்கள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியை மனையியல் தொழில் நுட்ப வல்லுநர் ரம்யா செல்லி ஒருங்கிணைத்தார்.