மூணாறில் தொடரும் பலத்த மழை
மூணாறில் பலத்த மழை தொடர்வதால் உள்ளூர் மக்கள் அச்சமடைந்து வரும் நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை அக்.15ல் முடிவுக்கு வந்த பிறகும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
பிற பகுதிகளை விட மூணாறில் இடி, மின்னலுடன் பலத்த மழை தொடர்கிறது. கடந்த இரண்டு நாட்களாக மாலை வேளையில் மழை கொட்டித் தீர்த்தது. பலத்த மழை தொடர்ந்த வண்ணம் உள்ளதால், மண் மற்றும் நிலச்சரிவுக்கு அஞ்சி உள்ளூர் மக்கள் அச்சம் அடைந்தனர். அதேசமயம் தற்போது மூணாறில் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வந்துள்ளனர். அவர்கள் மழையை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.