பிளஸ் 2 செய்முறை தேர்வு துவங்கியது
தேனி: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செயல்முறை தேர்வு மாவட்டத்தில் 98 மையங்களில் துவங்கியது. இத் தேர்வு பிப்.,14 வரை நடக்கிறது.
பிப்.15ல் துவங்கும் பிளஸ் 1 செய்முறை தேர்வு பிப்.,21வரை நடக்கிறது.
இயற்பியல், வேதியியல், உயிரியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், நர்சிங், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், அடிப்படை இயந்திரவியல், அடிப்படை எலக்ட்ரிக்கல், வேளாண் குரூப் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி தலைமையிலான அதிகாரிகள் கம்பம், போடி வட்டார பள்ளிகளில் ஆய்வு செய்தனர்.