அரசு ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் ஆலோசனை
அரசு ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாநில மண்டல நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை வில்லிவாக்கத்தில், நேற்று(அக்.,24) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், 130 நிர்வாகிகள் வரை கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 23 மாத பண பலன் வழங்காததை கண்டித்தும், நிலுவையில் உள்ள டி.ஏ., பெறுவது குறித்து, அடுத்த கட்ட போராட்டம் பற்றியும் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.