Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

தீபாவளி முன்பணம் வழங்கல்

மாவட்டத்தில் இதுவரை கருவூலம் மூலம் 8702 அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்கப்பட்டுள்ளது

அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு தீபாவளி, பொங்கல், ஓணம், ரம்ஜான், மீலாடிநபி, பக்ரீத், ஈஸ்டர், கிறிஸ்துமஸ், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு முன்பணம் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்த தொகைக்கு வட்டியின்றி ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்து வரவு வைக்கப்படுகிறது. மாவட்டத்தில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. பண்டிகை முன்பணம் தேவைப்படுபவர்கள் துறை அதிகாரிகள் மூலம் கருவூலத்திற்கு விண்ணபித்து முன்பணம் பெறுகின்றனர்.

மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதுவரை 8702 பேர் முன்பணம் பெற்றுள்ளனர்.

தற்போது மேலும் 440 பேர் முன்பணம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *