ஏலக்காய் விவசாயிகளுக்கு ஸ்பைசஸ் வாரியம் பயிற்சி
கம்பம் : ஏலக்காய் விவசாயிகளுக்கு நவீன சாகுபடி முறைகள், உரம்,பூச்சி மருந்து பயன்பாடு குறித்து ஸ்பைசஸ் வாரியம் பயிற்சி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்பைசஸ் வாரியம் அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
ஏலக்காய் சாகுபடி விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஸ்பைசஸ் வாரியம் பயிற்சி வகுப்புக்களை நடத்துகிறது. வரும்
டிச., 6 ல் காலை 10:00 மணிக்கு உரம், பூச்சி மருந்துகளை ஏலக்காய் சாகுபடியில் பயன்படுத்தும் முறைகள் பற்றி பாம்பாடும்பாறை ஏல ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பேராசிரியர் முருகன் பயிற்சியளிக்கிறார்.
டிச. 10 ல் ஏலத்தோட்டத்தில் தேனீ வளர்ப்பு, அனுபவம் பற்றி முன்னோடி விவசாயி ராஜு தோப்பிலா விளக்குகிறார்.
டிச.13 ல் ஏலக்காய், மிளகு சாகுபடி பற்றி உதவி பேராசிரியர் சிமி அஜரப், டிச . 20 ல் ஏலக்காய், மிளகு சாகுபடியில் ஆரோக்கியமான மற்றும் நவீன தொழில் நுட்பங்கள் பற்றி உதவி பேராசிரியர் நிமிக்ஷா மேத்யூ பேசுகின்றனர்.
நான்கு நாள் பயிற்சி முகாம் புத்தடியில் உள்ள ஸ்பைசஸ் வாரியத்தின் இ ஆக்சன் மையத்தில் நடைபெறுகிறது .
பயிற்சியினை பாம்பாடும் பாறையில் உள்ள மத்திய அரசின் ஏலக்காய் ஆராய்ச்சி மையம் நடத்துகிறது.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். விருப்பமுள்ள விவசாயிகள் 85902 66952 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.