Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

கனமழை: சண்முகாநதி அணை நீர்மட்டம் உயர்வு

மேகமலையில் பெய்து வரும் கனமழையால் சண்முகாநதி அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

மேகமலை பகுதியில் வடகிழக்கு பருவமழை காலத்தில் கூடுதல் மழை கிடைக்கும். தற்போது ஒரு வாரத்திற்கும் மேலாக மேகமலைப் பகுதியில் மழை பெய்து வருகிறது. சில நாட்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணை பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஹைவேவிஸ் பகுதியில் பத்து கூடு பகுதியில் பலத்த மழை பெய்ததால் சில நாட்களாக சண்முகா நதி அணைக்கு நீர் வரத்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. நேற்று அணைக்கு நீர் வரத்து 51 கனஅடியாக உயர்ந்தது.

இதனால் சண்முகா நதி அணையின் நீர் மட்டம் உயர துவங்கி உள்ளது. கடந்தாண்டு டிச . 8 ல் சண்முகா நதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

விநாடிக்கு 14.47 கனஅடி வீதம் திறக்கப்பட்டது.

தற்போது அணையின் நீர் மட்டம் 47.30 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவு 52.5 அடியாகும்.

தற்போது அணைக்கு வினாடிக்கு 51 கனஅடி நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விரைவில் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என்று நீர்வளத்துறையினர் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *