சி.பி.எஸ்., ஒழிப்பு உண்ணாவிரதம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சி.பி.எஸ்., (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) ஒழிப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், இணை ஒருங்கிணைப்பாளர் முகது ஆசிக், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் பிரசாத்குமார், மாவட்ட நிர்வாகி காமேஷ்வரன், அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் முகமது அலி ஜின்னா, மாவட்ட செயலாளர் சென்னமராஜ், மாவட்ட தலைவர் உடையாளி, அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் குபேந்திர செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.