பள்ளி கல்வித் துறை செயலருக்கு பட்டதாரி ஆசிரியர் கழகம் மனு
தேனி:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தேனி மாவட்ட தலைவர் டோமினிக்லாரான்ஸ், மாவட்ட செயலாளர் ஆனந்தகுமரன், மாவட்ட பொருளாளர் மகேந்திரன், மாவட்ட அமைப்புச் செயலாளர் கருப்பையா மற்றும் மாநில நிர்வாகிகள் சிவக்குமார், மஹபூப்பீவி, பாண்டித்துரை ஆகியோர் தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஜனவரி 2025ம் மாதத்திற்குரிய ஊதியம் சார்ந்த பட்டியல் நாளது தேதி வரை தயாரிக்காமல் உள்ளது.
எனவே, ஜனவரி 2025ம் மாத ஊதியம் கிடைக்குமா, மேலும் கால தாமதம் ஆகுமா என்ற அச்சத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர். எனவே, ஜனவரி 2025க்கு உரிய ஊதியம் விரைந்து கிடைக்க மாநில பள்ளிக்கல்வித் துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.