Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

கேரள போக்குவரத்து கழகம் அறிவிப்பு- பம்பையில் 24 மணி நேரம் பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்

‘பம்பையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த அதே வழியில் 24 மணி நேரம் வரை செல்லுபடியாகும்.’ என கேரள அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் தனி வாகனங்களில் வருவது மட்டுமின்றி அரசு பஸ்களிலும் முன்பதிவு செய்து வருகின்றனர். இதற்காக கேரளாவில் பல்வேறு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சபரிமலையில் தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்கள் தங்களது ஊருக்கு திரும்புவதற்காக கோயிலுக்கு செல்லும்போது பம்பையில் முன்பதிவு செய்கின்றனர். கோயிலில் நெரிசல் அதிகரிக்கும் போது திரும்பி வருவதில் தாமதம் ஏற்படுகிறது. பம்பையில் குறிப்பிட்ட நேரத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் அந்த பஸ்சில் பயணம் செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து கேரள அரசு போக்குவரத்து கழகம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது.

பம்பையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த அதே வழியில் 24 மணி நேரம் வரை செல்லுபடியாகும். நெரிசல் காரணமாக தரிசனம் முடிந்து பம்பை திரும்பும்போது நிர்ணயிக்கப்பட்ட முன்பதிவு நேரத்தை கடந்தால் அதே வழியில் மற்றொரு பேருந்து பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்காக பக்தர்கள் அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம் என கேரளா அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *