பெரியகுளம் – சோத்துப்பாறை ரோடு விரிவாக்க பணி
பெரியகுளம் : பெரியகுளம் சோத்துப்பாறை ரோட்டில் ரூ.1.50 கோடி மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.
பெரியகுளம் நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் பெரியகுளம் தண்டுப்பாளையம் முதல் சோத்துப்பாறை ரோடு விளையாட்டு மைதானம் வரை 2 கி.மீ., தூரத்திற்கு ஏற்கனவே 7 மீட்டர் அகலம் உள்ள சாலைப்பகுதியின் இரு புறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றி 10 மீட்டருக்கு பேவர் பிளாக் கற்கள் அமைக்கப்பட உள்ளது. வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சிறுபாலம் அகலப்படுத்தி வடிகால் கட்டுமான பணி, சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை கோட்டப் பொறியாளர் சுவாமிநாதன், உதவி கோட்டப் பொறியாளர் கிருஷ்ணன், உதவிப் பொறியாளர் சரவணன், சாலை ஆய்வாளர் சரவணன் ஆய்வு செய்தனர்.